புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்’; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை! | Puducherry CM Rangasamy presented a budget worth ₹14,300 crore for the 2026-2027 financial year

Spread the love

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கு ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.

சட்டப்பேரவையில் அவர் வாசித்த பட்ஜெட் உரையில், `தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலைதேடுவோர் மற்றும் வேலை அளிப்போரை டிஜிட்டல் முறையில் இணைக்க பொது மையம் அமைக்கப்படும். உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த முதல்வர் உள்ளாட்சி வளர்ச்சி பாதை திட்டம் அறிமுகமாகிறது.

பொதுமக்கள், எம்.எல்.ஏ-க்கள்  பரிந்துரை அடிப்படையில் ரூ.1,131 கோடி மதிப்பீட்டில் 2,282 பணிகள் கொண்ட விரிவான ஐந்தாண்டு திட்டம் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் படிப்படியாக தொகுதிவாரியாக செயல்படுத்தப்படும். மத்திய அரசு நிதியுதவியுடன் சாலையோர உணவு மையம் அமைக்கப்படும்.

புதுச்சேரி அரசு

புதுச்சேரி அரசு

மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு குழந்தைகளுக்கு இலவசமாக டேப் (கையடக்க கணினி) இந்த நிதியாண்டு முதல் தரப்படும். 16,250 பேர் பயன்பெறும் இந்தத்  திட்டத்துக்கு ரூ.16.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி தரப்படும்.

அதற்கு அரசுக்கு கூடுதலாக ரூ. 6.46 கோடி செலவு ஏற்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.35,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்படும். ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவை மகளின் திருமண நிதியுதவி ரூ.40,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *