
டிஜிபி அலுவலகத்தில் உள்ள டிஜிபிக்கான அறைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக டிஜிபி அலுவலக வாயிலில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.இதையடுத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுத்துறை ஐஜி அஸ்ரா கர்க், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி.போதை பொருட்கள் இல்லாத வகையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றம் கட்டுப்படுத்தவும், சைபர் கிரைம் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். என்றார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்புலனாய்வில் அதிக அனுபவம் கொண்டவர் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மகேஷ் குமார் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு பிறகு மீண்டும் தமிழக காவல்துறை பணிக்கே திரும்பி உள்ளார் குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தமிழக காவல்துறை முழு நேர டிஜிபி நியமிக்கப்படாத நிலையில், தற்போது தான் முழு நேர டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வாலை நியமித்துள்ளது தமிழக அரசு.
சிறைத்துறை சந்தீப் ராய் மாற்றம்
சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சந்தீப் ராய் ரத்தோர் தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத் தலைவராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். அதேபோல சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே. சங்கர், சிஐடி -அமலாக்கத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் ரத்தோரை சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.