USB பென் டிரைவை (குறிப்பாக Type-A) கணினியில் செருக முற்படும்போது, பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான அனுபவம், அதை ஒரே பக்கமாக மட்டுமே செருக முடியும் என்பதுதான்.
“எப்படியும் குறைந்தது மூன்று முறை மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்தால்தான் அது சரியாக நுழையும்” என்பது இணையத்தில் பலராலும் பகிரப்படும் ஒரு உலகளாவிய நகைச்சுவை.
இது ஒரு வடிவமைப்புப் பிழை போலத் தோன்றினாலும், இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் காரணம் உள்ளது.
1990-களின் மத்தியில் இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பட் தலைமையிலான குழுதான் USB-ஐ (Universal Serial Bus) உருவாக்கியது.
USB-ஐ இருபுறமும் செருகும் வகையில் (Reversible) வடிவமைக்க வேண்டும் என்றால், அதனுள் இருக்கும் வயர்கள், உலோக ஊசிகளின் எண்ணிக்கையை இருமடங்காக்க வேண்டும். மேலும், எந்தப் பக்கம் செருகப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய கூடுதல் மின்சுற்றுகள் தேவைப்படும். இது ஒட்டுமொத்த தயாரிப்புச் செலவை இரண்டு மடங்காக ஆக்கியிருக்கும்.