நடிகர் கமல் ஹாசனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சு.அருண் குமார் இயக்குகிறார். முழு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு சண்டியர் எனப் பெயரிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.
இந்நிலையில் இயக்குநர் சு.அருண் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ” எனது அனைத்துப் படைப்புகளிலும் நான் அறிந்தும் அறியாமலும் ஒரு உன்னத கலைஞனின் பலவித தாக்கங்கள் இருந்துகொண்டே வந்தது. அவையனைத்தும் என்னை செழுமைப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.
சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், இன்று நான் அந்த உன்னத மகா கலைஞன் கமல்ஹாசன் அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறேன்.