டெல்லி போராட்டம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ‘We The Leaders’ அமைப்பின் தலைமைச் சேவகர் அண்ணாமலை.
பாஜகவின் ‘பி-டீம்’… துரந்தர்
“நீட் தேர்வுப் போராட்டங்களின்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொண்டது முதல், என் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழ்நாட்டின் கள நிலவரங்கள் மற்றும் பிரச்னைகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்பதால் அவற்றை நான் கடந்து சென்றேன்.
ஒருவகையில் இது எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில் நான் பாஜகவின் ‘பி-டீம்’ என்றும், தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட ‘துரந்தர்’ என்றும் குத்தப்பட்ட முத்திரையை இது உடைத்தெறிந்தது.

பாஜகவில் சிலருக்கு selective amnesia…
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சி.ஜே.பி (CJP) அமைப்பின் போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை தடுப்புக் காவலில் வைத்த முறைகள் குறித்து நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. பாஜகவில் உள்ள சிலருக்கு selective amnesia இருக்கலாம் என்பதால், நான் இதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். நான் ஜூன் 5, 2026 அன்றே பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.
நேற்று நான் குறிப்பிட்டது போல, சி.ஜே.பி-யின் வழிமுறைகளுடன் நான் உடன்படாமல் இருக்கலாம்.
ஆனால், தங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும் ஒரு பிரச்னையில் எதிர்ப்பு தெரிவிக்கவோ, விவாதிக்கவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா?ஆம், நிச்சயமாக இருக்கிறது.