சத்துணவு: “20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமிப்பு” – அண்ணாமலை குற்றச்சாட்டு | Nutritious Meal Scheme: “20 Crore Eggs Purchased and Stored in Cold Storage Facilities” — Annamalai Alleges

Spread the love

தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளின் தரம் மற்றும் கொள்முதல் முறைகேடுகள் குறித்து, பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூ.5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூ.3.70 என்று விலை குறைந்தபோது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, குறைந்த விலைக்குப் பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூரக் கிராமப்புறப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்படும்போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *