சத்யபாமா விவகாரம்: ஸ்டாலினுக்கு எதிராக தவெக மகளிர் அணி புகார்|Stalin’s Sathyabama Remarks Trigger Fresh Police Complaints

Spread the love

கடந்த அக்டோபர் 2-ம் தேதி, இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருந்தார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின்.

அப்போது மேடையில் பேசும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தாராபுர வேட்பாளர் சத்யபாமாவை “பல்டி பாமா’ என்று கூறி, உருவக்கேலி செய்வதுபோலப் பேசியிருந்தார்.

இது பல்வேறு தரப்பில் கண்டனங்களைக் கிளப்பியது.

தற்போது ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தவெகவின் மகளிர் அணி திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், தில்லை நகர், அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஐந்து காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளது.

இந்தப் புகாரை ஏற்று அந்தந்தக் காவல் நிலையங்களில் சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு, ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து தவெகவின் வழக்கறிஞர் அணி தேர்தல் ஆணையம், டி.ஜி.பி, சென்னை காவல் ஆணையர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *