சவுதி ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல்.. 3 பேர் பலி! ஓயாத பதற்றம் | Houthi attacks two airports in Saudi Arabia Three civilians killed

Spread the love

International

oi-Mani Singh S

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மீது ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். பலியான மூன்று பேரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று சவுதி தெரிவித்துள்ளது. ஏர்போர்ட் மீதான தாக்குதலால், மத்திய கிழக்கில் பதற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஏமனில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது. ஏமன் அரசுப்படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுகும் ஆண்டு கணக்கில் மோதல் நீடித்து வருகிறது. இதில் ஏமன் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நிதி மற்றும் ஆயுத உதவி அளித்து வருகிறது.

Saudi airport Houthi rebels Yemen Saudi Arabia

இதனால் சவுதிக்கும் அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே மறைமுக மோதல் போக்கு நிலவி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க ஏமனில் கடந்த சில நாட்களாக உள்நாட்டு போர் தீவிரம் அடைந்து வருகிறது. ஏமன் அரசுக்கு படைக்கு ஆதரவு அளிப்பதால் சவுதி மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். சவுதியில் உள்ள அப்ஹா விமான நிலையம் மற்றும் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சிக்குழு பொறுப்பேற்றுக்கொண்டது.

செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டப் நீரிணை பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் தங்களது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதன் தொடர்ச்சியாக விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அப்ஹா விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகினர். 28 பேர் காயம் அடைந்தனர். கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

சவுதி அரேபியாவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய 3 நாடுகளும் இணைந்து மெக்கா பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
சவுதி அரேபியாவில் கூட்டு ராணுவப் படைகளை உடனடியாக நிறுத்தவும் அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. ரியாத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து மோதல்கள் நீடித்து வருவதால் மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *