சில மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கவனித்தபோது, பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குன்றி, மிகவும் முதுமையடைந்தவராகத் தெரிந்தார். அவரது கட்சியினரிடையே இது குறித்துப் பேச்சுகள் அடிபட்டன. விரைவில் ‘டைம்’ (Time) இதழில் அவரது உடல்நலக் குறைபாடுகள் குறித்த கட்டுரை ஒன்றும் வெளியானது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அந்தப் பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பேசும்போது நான் சற்று எல்லை மீறிவிட்டேனோ என்று தோன்றியது. அவர் ஒரு மூத்த தலைவர்.
நாங்கள் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், அவர் நாட்டின் பிரதமர். அவரை விமர்சிக்கும்போது நான் இன்னும் நிதானமாக இருந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான நடிகர் அமிதாப் பச்சனின் பெயர் புத்தகத்தில் மூன்று முறை மட்டுமே வருகிறது. அவரது மனைவி ஜெயா பச்சன் பற்றி குறிப்பிடவே இல்லை.
அறுந்து போன அமிதாப் உறவு
ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு அமிதாப் பச்சனுடனான ராஜீவ் காந்தி குடும்ப உறவு நின்று போனதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் சோனியா காந்தி, அமிதாப் பச்சனின் பெற்றோர்களான இந்தி கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் ஆகியோரைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவர் 1968 இல் முதன்முதலில் இத்தாலியில் இருந்து இந்தியா வந்தபோது ஹரிவன்ஷ் ராய் பச்சன் வீட்டில் தங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டபோது தேஜி பச்சன் அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டார்.
மேலும், பிறந்த சில மணி நேரங்களிலேயே தனது முதல் மகனை இழந்த சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டி உட்பட, பல பரிசுகளைப் பல ஆண்டுகளாக வழங்கினார். டெல்லியில் சோனியா காந்தியின் ஆரம்ப நாட்களில், ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவருக்கு அவ்வப்போது இந்திப் பாடங்களையும், சிறந்த அறிவுரைகளையும் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.