சனம் ஷெட்டி பரபரப்பு பேச்சு: சென்னையில் நீட் போராட்டம் போலி என கடும் குற்றச்சாட்டு|Sanam Shetty Sparks Row at NEET Protest Over Vijay Remark

Spread the love

நேற்று சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு நடிகை சனம் ஷெட்டி பேசினார்.

அங்கே அவர், “இது மாணவர்களுக்கான போராட்டம்.

இந்த மேடையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்தான் கோமாளிகள், நாங்கள் அல்ல.

நான் தளபதியின் தீவிரமான ரசிகை, நேற்றுதான் அவரது படத்தைப் பார்த்துவிட்டு வந்தேன்…” என்று பேசி கொண்டிருக்கும் போதே, அவருக்கு எதிராக குரல்கள் எழுந்தன. அவரிடமிருந்து மைக்கும் பிடுங்கப்பட்டது.

நீட் தேர்வு

நீட் தேர்வு

இதனால், பாலன் இல்லத்தில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, “மாணவர்கள் சார்ந்த போராட்டம் என்றும், அவர்களுக்காகப் குரல் கொடுக்குமாறும் கூறித்தானே என்னை அழைத்தார்கள்? அதைத்தானே நானும் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், அழைத்துப் பேச வைத்துவிட்டு, நான் ஒரு திரைப்படம் பார்த்ததற்காக என்னை “ஜோக்கர்’ என்று விமர்சிக்கிறார்கள். ஒரு திரைப்படம் பார்த்த காரணத்திற்காகவே நான் ஜோக்கர் ஆகிவிடுவேனா?

இங்கே மேடையில் இயக்குநர் வெற்றிமாறன் அமர்ந்திருக்கிறாரே, அவர் எத்தனையோ திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்; அப்படியென்றால் அவரையும் சேர்த்துத்தான் ஜோக்கர் என்று சொல்கிறீர்களா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *