சனி தசை: வெளியே சொல்ல முடியாமல் உள்ளூர அழுகிறீர்களா… பொங்கு சனீஸ்வரரை ஒருமுறை தரிசித்து வாருங்கள்! | kuchanur saneeswarar temple

Spread the love

அஷ்டமத்து சனி, கண்ட சனி, ஜீவன சனி, ஏழரைச் சனி என எந்த சனி தோஷம் கொண்டவரும் இங்கு வந்து கருங்குவளையாலும், வன்னி இலையாலும் சனீஸ்வரரை அர்ச்சித்து, காகத்துக்கு உணவிட்டு வழிபட வேண்டும். எள் தீபமிட்டு, கறுப்பு வஸ்திரம் சாத்தி, எள்ளு சாதம் நைவேத்யம் செய்து வணங்க எல்லா சனிதோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இங்கு நடைபெறும் ஆடிப்பெருந் திருவிழாவின்போது காக்கை உருவம் கொண்ட கருநீலக் கொடி ஏற்றப்பட்டு, விழாவின் முக்கிய நிகழ்வாக சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெறும். அப்போது இங்குள்ள காவல் தெய்வமான சோணைக் கருப்பண்ண சுவாமிக்கு மாமிச, மதுப் படையலுடன் திருவிழா நிறைவு பெறும்.‌

குச்சனூர் பொங்கு சனீஸ்வரர்

குச்சனூர் பொங்கு சனீஸ்வரர்

தொடர்ந்த துன்பங்கள், எடுத்துக்கொண்ட எல்லாக் காரியங்களிலும் தடைகள் என அவதிப்படுவோர், குறிப்பாக சரியான வேலை அமையாதவர்கள், தொழில் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட நினைப்பவர்கள், தேனியிலிருந்து குச்சனூருக்கு வரலாம். பஸ் வசதி உண்டு.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *