சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் டைரக்டர் அட்லியை இழுத்து அரசை விமர்சனம் செய்திருந்தார்.

ஆளுநர் உரை குறித்து பேசிய சிவசங்கர், ‘அட்லி சிறந்த திரைப்பட காட்சிகளை எடுத்து வந்து ஹிட் கொடுப்பார். அதேமாதிரி,அதுபோல எங்கள் ஆட்சியின் திட்டங்களை எடுத்து வைத்து கொண்டு ஆட்சி நடத்துகிறீர்’ என்றார்.
இதற்கு பதில் கூறி பேசிய அமைச்சர் ராஜ் மோகன், ‘தமிழ்த் திரையுரகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர். ஆனால் சிவசங்கர் முழு அரசியல்வாதி , அவர் அட்லி குறித்து பேசியது அதிர்ச்சியும் ஆச்சரியமும் தருகிறது.
அட்லிக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. காலமும், காட்சியும் ஏற்கனவே மாறிவிட்டது’ என்றார்.

இதற்கு பதில் கூறிய சிவசங்கர், ‘நான் அட்லியை மட்டும் இல்லை உங்களையும் பாலோ செய்கிறேன்’ என்றார்.
தொடர்ந்து அளுநர் உரையின் மீதான விவாதம் அவையில் நடந்து வருகிறது.