“சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது செல்லும்!”- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Spread the love

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் – மரகரம் குமரவேல், தாராபுரம் – சத்தியபாமா, அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா, பெருந்துறை – ஜெயக்குமார், கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை – சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் எல் ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இதுசம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *