சபாநாயகர் விவகாரத்தில் பாஜகவுடன் உரசல்; தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்த ரங்கசாமி

Spread the love

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. அதன்படி 31-வது தென் மண்டல முதல்வர்கள் மாநாடு மற்றும் ஆய்வுக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாமல்லப்புரம் கோவளத்தில் நேற்று தொடங்கியது.

இரண்டாவது நாளான இன்று தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர்களின் மாநாடு நடைபெறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்

நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்

அதன்படி இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ரங்கசாமி புறக்கணித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பேட்டியில், “இந்த மாநாடு நமக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு.

அதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தலாம். ஆனால் நம் முதல்வர் ரங்கசாமிக்கு அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆர்வம் இல்லை. அதை புறக்கணிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. துணைநிலை ஆளுநர் பங்கேற்றாலும், அவரால் பொதுவான பிரச்னைகள் குறித்து மட்டுமே பேச முடியும். மாநில பிரச்னைகளை முன் வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதலமைச்சரால் மட்டுமே முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *