
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலக சகோதரத்துவத்தைப் பாடிய தமிழ் மண்ணில், பெண்ணை அவமதிக்கும் மொழி பேசப்படுவது வெட்கக்கேடானது. ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என திருவள்ளுவர் கூறியுள்ளார். ஒரு அரசியல்வாதியின் வார்த்தை என்பது வெறும் சொல் அல்ல. அது சமூக மனநிலையை வடிவமைக்கும் சக்தி. அந்த வார்த்தைகள் பெண்களின் மரியாதையை காயப்படுத்தும் வகையில் இருந்தால், அது சாதாரண தவறு அல்ல – சமூகத்திற்கு எதிரான பொறுப்பற்ற செயல்.
சமூகநீதி, சமத்துவம் என்று மேடைகளில் பேசிக்கொண்டே, நடைமுறையில் பெண்களை பொருளாகவும் கூட்டணிக் கட்சிகளை அடிமைகளாகவும் பார்க்கும் மனநிலையே இன்று ஆ.ராசாவின் பதிவுகளில் வெளிப்படுகிறது. ‘அறம் செய விரும்பு’ என்று அவ்வையார் சொன்ன தமிழகம், ‘அவமதித்து அரசியல் செய்’ என்று ஒருபோதும் கற்றுக் கொடுக்கவில்லை. இப்போது தமிழகம் காத்திருப்பது அடுத்த பதிவை அல்ல… தன்னுடைய வார்த்தைகளுக்கான மனமாறிய மன்னிப்பைத்தான்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.