சர்க்கரை ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்த மத்திய அரசு|Centre Stops Sugar Exports to Control Domestic Price Rise

Spread the love

தற்காலிகமாக இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம்.

அமைச்சகம் என்ன சொல்கிறது?

வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை (ரா சுகர், வெள்ளை சர்க்கரை, ரீஃபைண்டு சர்க்கரை) ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

ஆனால், இந்தத் தடை, CXL மற்றும் TRQ கோட்டாப்படி, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி தடை இல்லை.

ஏன் இந்த அறிவிப்பு?

உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்து சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. பிரேசில், தாய்லாந்திற்கு அடுத்து இந்தியா மூன்றாவது சர்க்கரையை அதிகம் ஏற்றுமதி செய்து வருகிறது.

அப்படியிருக்கையில், இந்த அறிவிப்பு உலக அளவில் மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *