“சல்மான்கான்தான் எங்கள் இலக்கு; அவரை நெருங்க முடியாததால் இலக்கை மாற்றினோம்” – ஷெராப் கொலை முயற்சி | perpetrators behind attack on TigerShroff shifted their focus afterfailing to get close to Salman Khan.

Spread the love

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர துப்பாக்கியை ஏற்பாடு செய்து கொடுத்த 4 பேர் டெல்லி மற்றும் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள ரோஷன், ரேஹன், பூல் சிங் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உண்மையில் டைகர் ஷெராப் மீது துப்பாக்கியால் சுடும் திட்டம் கிடையாது என்றும், நடிகர் சல்மான் கான் மீதுதான் துப்பாக்கியால் சுட திட்டமிட்டு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டைகர் ஷெராப்பை துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில், நடிகர் டைகர் ஷெராப்பைக் குறிவைப்பதற்கு முன்பு, மும்பையில் உள்ள நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் நடிகரின் வீட்டிற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பைக் கண்டதையடுத்து அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

டைகர் ஷெராப், சல்மான் கான்

டைகர் ஷெராப், சல்மான் கான்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சல்மான் கானின் இல்லத்திற்குச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெளியே போலீஸார் நிறுத்தப்பட்டிருப்பதைக் கவனித்த பிறகு தங்களது திட்டத்தை மாற்றிக்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வெளியே மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் மற்றும் சாலையின் இருபுறமும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

டைகர் ஷெராப் பொதுவெளியில் மிகவும் எளிமையாக, எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நடமாடுவதால், இந்தக் கும்பல் அவரைத் தங்கள் இலக்காகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. டைகர் ஷெராப் வழக்கமாக வந்து செல்லும் இடங்களை நோட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தவறாமல் கால்பந்து கிளப்பிற்கு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு காத்திருந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்பே, இந்தக் கும்பல் டைகர் ஷெராப்பிற்கு மிரட்டல் விடுத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாவில் கைது செய்யப்பட்டு சாலை வழியாக அழைத்து வரப்படும் நபர்களிடம் இன்னும் விசாரணை நடத்தப்படாததால், இது குறித்து கருத்து தெரிவிக்க மூத்த காவல்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *