Gold Price Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு! – Kumudam

Spread the love

சர்வதேச பொருளாதார நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகிதங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் (அக்.,19) தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,08,560 ஆகவும், ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.13,570 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனையானது.

இதையடுத்து நேற்று(அக்.,20) தங்கம் விலை மீண்டும் சரிந்தது. ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.13,490 ஆகவும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.1,07,920 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை தொடர்ந்து 5-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று(அக்.,21) தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,07,120க்கும், ஒரு கிராம் ரூ.13,390க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *