சவால்களை வென்று மாணவர்களை உயர்த்திய லலிதா டீச்சரின் கதை | Honoring the Sacrifices of Lalitha Teacher

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

“குரு ப்ரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வரா”  என்று ஆசிரியரின் நிலையை கடவுளின் நிலைக்கு உயர்த்தியுள்ளது நம் சாஸ்திரங்கள். மாணவரின் வாழ்வில் பெற்றோருக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் நிற்பவர் ஆசிரியர். எனவே, ஆசிரியர்களின் உழைப்பையும் தியாகத்தையும் மதித்து, அவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது ஒவ்வொருவரின் கடமை.

ஒரு நல்ல ஆசிரியர் உருவாக்கும் மாணவர், நாளை நல்ல குடிமகனாக வளருவார். அவர் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, விஞ்ஞானியாகவோ, கலைஞராகவோ, தலைவராகவோ உயர்ந்தாலும், அதன் அடிப்படை ஆசிரியரின் உழைப்பில் தான் இருக்கிறது. எனவே, சமூக முன்னேற்றத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் ஆசிரியர்களின் பங்கு மறுக்க முடியாதது. ஆசிரியர் ஒரு உயர்ந்த நிலையிலிருக்கும் தன் மாணவனைப் பார்த்து “இவன் என் மாணவன்” என்று மிகுந்த பெருமிதம் கொள்வார்.

ஆசிரியர்களின் வாழ்க்கை எளிதானதல்ல. காலை முதல் மாலை வரை மாணவர்களுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் படிப்பு முன்னேற்றம், ஒழுக்கம், மனநிலை, சமூகப் பொறுப்பு என பல்வேறு துறைகளிலும் வழிகாட்டியாக செயல்படுகிறார்கள்., ஆசிரியர் தன்னுடைய அறிவை மறைக்காமல் பகிர்ந்து, மாணவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார்..

ஆசிரியர்கள் சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றுவதில்லை. பலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் சுகவாழ்வைத் துறந்து, மாணவர்களுக்காக உழைக்கிறார்கள். சில சமயங்களில் மாணவர்களின் தேவைக்காக தங்கள் பணத்தைச் செலவிடுகிறார்கள். கூடுதல் நேரங்களில் வகுப்புகள் எடுத்து, விடுமுறைகளிலும் மாணவர்களை வழிநடத்துகிறார்கள். இது அவர்களின் தியாக உணர்வுக்குச் சான்று.
சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *