சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை… – Kumudam

Spread the love

இந்தியாவில் சமூக நீதி,இடஒதுக்கீடு  மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய காரணங்களுக்காக  நீண்டகாலமாக கோரப்படுகின்ற ஒரு செயல்முறை,ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் களத்தில் பலத்த சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் நிலவி வருகின்றன. 

இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் தமிழகத்தில் சாதி அடையாளங்கள் மற்றும் சமூக ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும் இந்தியாவை சாதியற்ற சமூகமாக மாற்றும் இலக்குக்கு எதிராக இது அமைந்துவிடும் என்று பலரின் கருத்தாகவும் இருக்கின்றது.

மேலும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான சாதிய உட்பிரிவுகள் இருக்கின்றன.துல்லியமாக கணக்கெடுக்க முடியாமல் போகலாம் மற்றும் இதன் மூலம் சில அரசியல் கட்சிகள் மக்களின் ஒற்றுமையை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான உத்தியாக மாறிவிடும் என்றும் கருதுகின்றனர்.

இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஒன்றிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 17 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஆற்றிய உரையில், மாநிலத்தில் உண்மையான சமூக நீதியை உறுதி செய்வதற்காகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது என்று அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று இன்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *