“தவெக ஆட்சியில் இதுவரை சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்..” – எடப்பாடி பழனிச்சாமி |”Measures taken so far to maintain law and order under this administration!” – Edappadi Palaniswami

Spread the love

அவர், “ஆளுநர் உரையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு எந்தத் திட்டங்களும் அந்த உரையில் இடம்பெறவில்லை.

வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற செய்திதான், இந்த உரையிலும் இருந்தது. இந்த ஆட்சியில் இதுவரை சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

போதைப்பொருள் விற்பனை முன்பைவிட இப்போது அதிகமாகி இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த அரசு ஆட்சிக்கு வந்து 38 நாட்கள் ஆகின்றன.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதில் 150 போக்சோ வழக்குகள், 126 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் இந்த நாட்களில் பதிவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வீர வசனம் எல்லாம் பேசினார்கள்.

இந்த அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்படாமல் ஆங்காங்கே மின்வெட்டு நடைபெறுகிறது. இதனால் மக்கள் பாதிப்படைகின்றனர்.

பலரின் தூக்கத்தை இந்த தவெக அரசு கலைத்திருக்கிறது. தேவையான மின்சாரத்தைக் கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும். ஆனால், அரசு வெவ்வேறு காரணங்களைச் சொல்லத்தான் முற்படுகிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *