சாதி மறுப்புத் திருமணம்: உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு நடத்திய பெற்றோர்! | Parents performed the final rites for their daughter who had entered into an inter-caste marriage.

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், தன் குடும்பத்தாரின் விருப்பத்தை எதிர்த்து “அக்னிவீர்’ ராணுவ வீரரான மாற்றுச் சமூக (OBC) இளைஞரைத் திருமணம் செய்துகொண்டார்.

இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெண்ணின் பெற்றோர், மகள் உயிருடன் இருக்கும்போதே அவரது புகைப்படத்துடன் கூடிய உருவ பொம்மையைச் செய்து, அதற்கு பாடை கட்டி, மயானத்தில் எரித்து திதி உள்ளிட்ட மரணச் சடங்குகளைச் செய்துள்ளனர்.

கல்லூரித் தேர்வு எழுதச் சென்ற மகள், தங்களுக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்டதாலும், சமூக அழுத்தம் காரணத்தினாலுமே இந்தச் சடங்குகளைச் செய்ததாக பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.

திருமணம்

திருமணம்
சித்திரிப்புப்படம்

முன்னதாக, பெண்ணின் குடும்பத்தினர் அளித்த கடத்தல் புகாரின் பேரில் போலீஸார் இருவரையும் விசாரித்தபோது, தான் 21 வயதுடையவர் என்றும், சுய விருப்பத்தின் பேரிலேயே இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டதாகவும் அந்தப் பெண் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

இத்திருமணத்தை மணமகன் வீட்டார் ஏற்றுக்கொண்ட போதிலும், தங்களுக்கு மறைமுக மிரட்டல்கள் வருவதாகவும், மகனின் ராணுவ வேலையைப் பாதிக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரப்பப்படுவதாகவும் மணமகனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதாரங்களுடன் புகாரளித்தால் மணமகன் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் சட்ட உதவி வழங்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *