இதனைத்தொடர்ந்து நீதிபதி சத்தியமூர்த்தி, அன்பில் மகேஸை நவம்பர் 2ஆம் தேதி வரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சனிடம் அன்பில் மகேஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், ” அவர் செய்த செயல் என்ன? கல்வியில் ஊழல்… 300, 400 கோடி ரூபாய். ஆனால், அவர்கள் அங்கு கேட்பது சாப்பாடு சரியில்லை என்று.
‘நான் இதை செய்யவில்லை’ என்று மனுவில் கூறியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், சாப்பாடு சரியில்லை என்றெல்லாம் அன்பில் மகேஸ் ஜாமீன் கோருவதா? இதெல்லாம் ஒரு விஷயமா?” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து, “தவெக அரசை ‘சோப்பலாங்கி அரசு, சுயபுத்தி இல்லாத அரசு’ என விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், ” ஸ்டாலின் போன்ற முதிர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த தலைவர் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது எதிர்பாராதது.
ஒரு தலைவரே இப்படி பேசினால், கீழ்மட்டத் தலைவர்கள் இதைவிட மோசமாகத்தான் பேசுவார்கள். முன்னாள் முதல்வர் இப்படி பேசுவதை மக்களை இழிவுபடுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.