‘சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா?’- ரவிசங்கருக்கு எடப்பாடி கண்டனம் | edappadi palanisamy slams tvk government

Spread the love

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்திக் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் பதிவில், “பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.

ரவிசங்கர்

ரவிசங்கர்

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய ரீல் முதல்வர் விஜய் அவர்களே! உங்கள் கட்சியின் துறையூர் “எல்லைக் காப்பாளர்” மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா?

உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா? மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்! ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை!

இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?முதல்வர் விஜய் அவர்களே?” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *