“I am God, you must obey me”: Self-styled godman sexually assaults woman staying at his ashram-நான் கடவுள், எனக்கு கீழ்படிவேண்டும்: ஆசிரத்தில் தங்கி இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பெண் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருக்கும் விருந்தாவனில் உள்ள சேவாதாம் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது அப்பெண் அங்கிருந்த மதபோதகர் இந்திரதேவ் மகாராஜ் மூலம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் 2023-ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் இந்திரதேவ் மகாராஜ் சொற்பொழிவுகளைப் பார்த்த பிறகு அவரை தொடர்புகொண்டார். பின்னர், அவரிடமிருந்து தீட்சை பெறுவதற்காக மும்பையின் சாந்தாகுருஸில் நடைபெற்ற ஒரு சத்சங்கத்தில் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து அவர்களுக்கிடையிலான தொடர்பு அதிகரித்தது. அப்பெண் தனது தனிப்பட்ட பிரச்னைகளை இந்திரதேவிடம் தெரிவித்தார். இந்திரதேவும் அவரிடம் பகிர்ந்துகொண்ட தனிப்பட்ட சிக்கல்களைத் தீர்த்து வைப்பதாகக் கூறி அப்பெண்ணின் நம்பிக்கையைப் பெற்றார். அதன் தொடர்ச்சியாகத் தான் அப்பெண் அவரது ஆசிரமத்திற்குச் சென்றார்.

அப்பெண் பிருந்தாவனில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது அவரை நள்ளிரவு இந்திரதேவ் தனது அறைக்கு அழைத்துள்ளார். அப்பெண் சாமியார் அறைக்கு சென்றதும் கதவை பூட்டிவிட்டார். அதோடு அப்பெண்ணுடன் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டார்.

இரவில் எங்கு சென்றாய் என்று யாராவது கேட்டால் மருந்து வாங்க சென்றதாக கூறும்படி தெரிவித்துள்ளார். அதோடு வீடியோ அழைப்புகளின் போது அந்த மத போதகர் தன்னை ஆடையைக் களைய வைத்ததாகவும், ஆபாசமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை பதிவு செய்ததாகவும் அப்பெண் மேலும் குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் தொலைபேசியில் தன்னை மிரட்டியதாகவும், அவமானப்படுத்திவிடுவதாக கூறி தொடர்ந்து தனது செயலை நீட்டித்து வந்தார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதோடு நானே கடவுள், நீ எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்,” என்று அவர் தன்னிடம் கூறியதாகவும் அப்பெண் தெரிவித்தார். இச்சம்பவங்கள் 2023ம் ஆண்டு நடந்தபோதிலும் சம்பந்தப்பட்ட சாமியார் இன்னும் கைது செய்யப்படவில்லை. தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல மாதங்களாக போராடி வருவதாகவும், ஆனால் மதுராவில் தனது புகார் புறக்கணிக்கப்பட்டதாகவும், சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் இதில் தலையிட்டதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். திருப்தி தேசாய் இது தொடர்பாக அளித்த பேட்டியில், மதபோதகர் உடனே கைது செய்யப்படவேண்டும் என்று கோரினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *