சாய் பல்லவி எதிர்ப்பு முதல் ரஹ்மான் இசை வரை!- ‘ராமாயணா’ திரைப்படத்தைத் தொடரும் சர்ச்சைகள்| Sai Pallavi to A.R. Rahman’s Music Controversies Surrounding the Film ‘Ramayana’

Spread the love

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அரிஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்தப் பாடல், ராமர் – சீதை திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

புராணக் காவியமான ராமாயணத்தில் சீதா-ராம கல்யாணத்தை சித்தரிக்கும் பாடலுக்கு கவ்வாலி மற்றும் சூஃபி இசையின் சாயல் இருப்பது எந்த விதத்தில் பொருத்தமாக இருக்கும் என்றும், ரஹ்மானின் ‘குன் ஃபயா குன்’ பாடலின் குரல் அமைப்பை இது நினைவுபடுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஏ.ஆர் ரஹ்மான்

ஏ.ஆர் ரஹ்மான்

தவிர ரஹ்மான் தன் பழைய தமிழ் பாடலின் ட்யூனை அப்படியே மறுபயன்பாடு செய்திருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அஜித் நடிப்பில் 2000-ல் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற ‘என்ன சொல்லப் போகிறாய்’ பாடலின் கோரஸ் மற்றும் இசை அமைப்பையே ‘மங்கல் ரங்’ பாடலிலும் ரஹ்மான் பயன்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

நடிகர்கள் தேர்வு தொடங்கி இசை உருவாக்கம் வரை ‘ராமாயணா’ திரைப்படம் தொடர் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.

எனினும் இது தென் இந்தியர்களை மட்டும் குறிவைத்து சிலர் நடத்தும் சமூக வலைதள தாக்குதல் என இந்த சர்ச்சைகளுக்கு எதிராக ஆதரவு குரல்களும் ஒலிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *