சங்கங்களுக்கெல்லாம் இது போதாத காலம்போல.
சில் மாதங்களுக்கு முன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் சேரன் தலைமையிலான அணி தலைவர் செயலாளர், பொருளாளர் பதவிகளைக் கைப்பற்ற… மீதமுள்ள பதவிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி சேரன் அணியைவிட கூடுதலாக ஓர் இடத்தைப் பிடித்தது எதிரணி.
தொடர்ந்து சின்னத்திரை இயக்குநர் சங்கத்துக்கு நடந்த தேர்தலிலும் தலைவர் ஓர் அணியிலிருந்தும் செயலாளர், பொருளாளர் வேறு அணியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இப்போது சின்னத்திரை எழுத்தாளார் சங்கத்துக்கு நேற்று நடந்த தேர்தலிலும் தலைவர், பொருளாளர் மற்றும் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் ஓர் அணியிலிருந்தும் செயலாளர் மற்றும் தற்போதைய தலைவர் எதிரணியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம்.
“‘சீரியலில் டயலாக் எழுதுகிற எழுத்தாளர்களுக்கென இயங்கி வருது இந்தச் சங்கம். தொடங்கி பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனா தேர்தல்னு நடப்பது இதுதான் முதல் தடவை. இதுக்கு முன்னாடியெல்லாம் நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாங்க. இந்த முறையும் தலைவர் பதவிக்கு ராஜ் பிரபு மட்டும் போட்டியில்லாம ஒருமனதா தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கம் உருவாக காரணமானவர்கள்ல ஒருத்தர்ங்கிறதால அவரை எதிர்த்து யாரும் போட்டியிடல.
சுமார் 200 பேர் வரை ஓட்டளிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் நடந்திச்சு. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டாங்க.