சிஎஸ்கே அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. இங்கிலாந்து அணியுடன் இணையும் மைக் ஹசி? அவரே எடுத்த முடிவு! | Mike Hussey: Mike Hussey Open to England Batting Coach Role If Called by Stephen Fleming

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

லண்டன்: இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. ஸ்டீபன் பிளமிங் அழைத்தால் என்னால் தட்ட முடியாது என்று கூறியுள்ள மைக் ஹசி, குடும்பத்தை விட்டு அவ்வளவு தூரம் பிரிந்திருக்க முடியுமா என்பதையும் சொல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக இருந்து வந்த மைக் ஹசி, ஜூன் மாதம் பதவி விலகினார். இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கும் அவருக்கு உற்சாகத்துடன் விடை கொடுத்தனர். சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் கொடுத்த தேடுதல் தீவிரமாக நடந்து வந்த சூழலில், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ஸ்டீபன் பிளமிங் வந்தார்.

Mike Hussey

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அவர் வந்தபின் இங்கிலாந்து கேப்டனாக ஜோ ரூட் நியமனம் செய்யப்பட்டார். இன்னும் சில நாட்களில் அந்த பொறுப்பை பிளமிங் ஏற்க உள்ள நிலையில், அவரின் குழுவினரையும் அடுத்தடுத்து பிளமிங் இங்கிலாந்து அணிக்குள் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக இருந்த போது மைக் ஹசி, எரிக் சிம்ம்ன்ஸ் ஆகியோர் பிளமிங்கிற்கு மிக முக்கிய தூண்களாக இருந்தனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு மைக் ஹசியை கொண்டு வர பிளமிங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து மைக் ஹசியிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மைக் ஹசி, அப்படியொரு வாய்ப்பு வரும் பட்சத்தில் நிச்சயம் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு பயிற்சி கொடுப்பதை நினைத்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. பிளமிங் உடன் எனக்கு மிக நெருங்கிய நட்பு இருக்கிறது. அதேபோல் குடும்பத்திடம் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழல் வரும்.

தற்போதைய சூழலில் என்னால் ஆமாம், இல்லை என்று பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். அதேபோல் 2022 டி20 உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக மைக் ஹசி இருந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி வென்றிருந்தது. இதனால் மைக் ஹசி விரைவில் பிளமிங்குடன் பயணிக்கும் முடிவை எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *