நெருக்கடி நேரங்களில், அவற்றை அடமானம் வைத்துப் பணம் வாங்குவதற்கும்தான். கல் நகைகளை அடமானம் வைக்கும்போது, கற்கள் போக, தங்கத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் கடனாக வழங்கப்படும். இதனால், நீங்கள் நினைத்த அளவு தொகை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.
இந்தச் சிக்கலில் எல்லாம் சிக்காமல் இருக்க, கல் இல்லாமலே, வேலைப்பாடுகள் உள்ள நகைகளைத் தேர்வு செய்யலாம்.
கல் வைத்து நகை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருந்தால், மோதிரம், கம்மல் ஆகியவற்றை வாங்குங்கள். இதனால், பெரியளவில் நஷ்டம் ஏற்படாது. ஏனெனில், அதன் எடை குறைவு.
இதனால், அதிகம் எடையுள்ள கல் வைத்த ஆரம், நெக்லேஸ், வளையலைத் தவிர்த்துவிடுங்கள்.
இந்த டிரிக்குகளைத் தங்க நகையை ஆபரணமாகவும் பயன்படுத்துவேன்… அவசரத்திற்கும் பயன்படுத்துவேன் என்பவர்களுக்குத்தான். தங்க நகையை முழுக்க முழுக்க அணிகலனாக மட்டுமே பயன்படுத்துவேன் என்பவர்கள் இந்த டிப்ஸ்களைத் தவிர்த்துவிடலாம்.
இதை எல்லாவற்றையும் விட, கூடுதல் டிப் ஒன்று: தேவை இருந்தால் மட்டுமே தங்க நகையை வாங்குங்கள். இல்லையென்றால், அந்தத் தொகையை கோல்டு இ.டி.எஃப்பில் போட்டு வையுங்கள்.