சிஎஸ்கே அணிக்கு வரும் சாய் கிஷோர்? நெஹ்ராவுடன் பேச தொடங்கிய ஜாகீர் கான்.. குஜராத் முடிவு என்ன? | As per sources Sai Kishore might be traded to CSK for all cash deal from Gujarat Titans

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: குஜராத் அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் சாய் கிஷோரை ஆல் கேஷ் டீல் மூலமாக வாங்க சிஎஸ்கே அணி காய் நகர்த்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவிடம் சிஎஸ்கே நிர்வாகமும், பயிற்சியாளர் ஜாகீர் கானும் பேச தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் மினி ஏலத்திற்கு சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இருப்பினும் சிஎஸ்கே அணி ஒரு இடதுகை இந்திய ஸ்பின்னரை வாங்க தீவிரமாக உள்ளது. மினி ஏலத்தில் ஸ்பின்னர்களுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. மும்பை, பஞ்சாப், ஆர்சிபி, ஐதராபாத் உள்ளிட்ட அணிகளும் இந்திய ஸ்பின்னரை வாங்க ஆர்வமாக உள்ளன.

CSK

தரமான இந்திய ஸ்பின்னர் மார்க்கெட்டில் இல்லை என்பதே நிதர்சனம். அவர்கள் ஏற்கனவே ஐபிஎல் அணிகளால் வாங்கப்பட்டுவிட்டனர். இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியால் இடதுகை ஸ்பின்னரை வாங்க முடியவில்லை என்றால், டிரேட் மூலமாக கைப்பற்ற தயாராகி வருகிறது. ஏற்கனவே டிரேட் பேச்சுவார்த்தைக்காக பல்வேறு அணிகளையும் சிஎஸ்கே அணி நாடிவிட்டதாக கூறியுள்ளார்.

குறிப்பாக குஜராத் அணியின் ஆஷிஷ் நெஹ்ரா தங்களுக்கு தேவையான ஒரு வீரரை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் ஜாகீர் கான் வாய்விட்டு கேட்டுள்ளார். இதனால் குஜராத் அணியின் சாய் கிஷோர் மீது சிஎஸ்கே அணி கண் வைத்திருப்பதாக தெரிகிறது. அவரை சிஎஸ்கே அணிக்கு கொண்டு வந்துவிட்டால், நூர் அஹ்மத் அல்லது அகீல் ஹொசைன் இருவரில் ஒருவரை மட்டுமே விளையாட வைக்க முடியும்.

இதன் மூலமாக லிவிங்ஸ்டனை பிளேயிங் லெவனில் சேர்க்க முடியும். அதற்கேற்ப சிஎஸ்கே அணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. குறிப்பாக எந்தவொரு வீரரையும் விட்டுக் கொடுக்காமல், சாய் கிஷோரை ஆல் கேஷ் டீல் மூலமாக வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக உள்ளது. இதற்காக சாய் கிஷோரிடமும் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

ஏற்கனவே சாய் கிஷோர் ரீடெய்ன் செய்யப்பட்டுவிட்டதால், அவருடன் பேசுவது பெரியளவில் பலன் அளிக்குமா என்பது சந்தேகம் தான். இதனால் குஜராத் அணி நிர்வாகம் முழுக்க முழுக்க சிஎஸ்கே அணி உதவியாக சாய் கிஷோரை கொடுத்தால் மட்டுமே, இந்த டிரேட் ஒப்பந்தம் நிறைவடையும் என்று பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *