சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டேவா.. வாய்ப்பே இல்லை ராஜா.. தோனி இப்படியொரு முடிவை எடுக்க மாட்டார்! | Why CSK and MS Dhoni won’t target Tushar Deshpande in the IPL Mini Auction 2027

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: ராஜஸ்தான் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் அவரை சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்பு உள்ளதாக பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் துஷார் தேஷ்பாண்டேவை மீண்டும் சிஎஸ்கே அணி வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

2023 ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் துஷார் தேஷ்பாண்டே. அப்போதைய சிஎஸ்கே அணியில் தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, பதிரானா, ஜடேஜா, தீக்சனா ஆகியோரை கொண்டு பவுலிங் வரிசை சிறப்பாக ஆடியது. இதன்பின் 2025 மெகா ஏலத்தில் துஷார் தேஷ்பாண்டேவை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருந்தது.

CSK

ஆனால் ராஜஸ்தான் அணி துஷார் தேஷ்பாண்டேவை ரூ.6.5 கோடி கொடுத்து வாங்கியது. 2 சீசன்களில் துஷார் தேஷ்பாண்டேவுக்கு ராஜஸ்தான் அணி பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்போது முகமது ஷமியும் இணைந்துவிட்டதால், துஷார் தேஷ்பாண்டேவை ரிலீஸ் செய்துவிட்டனர். இதனால் அவர் மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் நிச்சயம் கண் வைத்திருக்கிறது என்று ரசிகர்களிடையே பேச்சுகள் எழுந்துள்ளன.

ஆனால் சிஎஸ்கே அணி துஷார் தேஷ்பாண்டேவை வாங்குமா என்பது சந்தேகம் தான். சேப்பாக்கம் மைதானத்தில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது துஷார் தேஷ்பாண்டேவுக்கு நன்றாக தெரியும். ஆனால் துஷார் தேஷ்பாண்டேவின் இடத்தில் தான் சிஎஸ்கே அணிக்காக அன்சுல் கம்போஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட இருவருமே ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள் தான்.

அன்சுல் கம்போஜ் இன்னும் வேகமாக வீசக் கூடிய பவுலர். தற்போது நியூசிலாந்து ஒருநாள் தொடரில் அன்சுல் கம்போஜ்-ன் செயல்பாடுகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஓவர்டன் மற்றும் அன்சுல் கம்போஜ் இருவரும் ஹார்ட் லெந்தில் பந்தை வீசினால், நிச்சயமாக எதிரணியினர் அச்சம் கொள்வார்கள்.

அதனை மீறி துஷார் தேஷ்பாண்டேவை வாங்க வேண்டுமென்றால், சிஎஸ்கே அணி பேக் அப் வீரராக அடிப்படை விலைக்கு வாங்க முயற்சிக்கும் என்றே பார்க்கப்படுகிறது. ஆனால் சிஎஸ்கே அணி நிச்சயமாக தீபக் சஹரை வாங்க முயற்சிக்கும் என்று கருதப்படுகிறது. பவர் பிளேவில் பவுலிங் செய்ய வேகப்பந்துவீச்சாளர் இல்லாததால், தீபக் சஹர் மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் கண் வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *