சிஎஸ்கே கேப்டனை மாற்றப் போறீங்களா.. சஞ்சு சாம்சன் பெயரை பரிசீலிக்கணும்.. முன்னாள் வீரர் அட்வைஸ்! | Sanju Samson: Should Sanju Samson Lead CSK? Sadagoppan Ramesh’s Statement Triggers Discussion

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன்சி சஞ்சு சாம்சன் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது. கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியுடன் இணைந்த நிலையில், ஒரே ஆண்டில் அவரிசம் கேப்டன்சி அளிக்க வேண்டுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 3 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்ட சீசன் தொடங்கியே இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2 சீசன்களில் ருதுராஜ் கெய்க்வாட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற்றி கொண்டு செல்ல முடியவில்லை.

Sanju Samson

அதேபோல் கேப்டன்சி அழுத்தம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கும் சிக்கலாகி இருக்கிறது. பிளேயிங் லெவன் தொடங்கி ஸ்பின்னர்களை பயன்படுத்துவது வரை ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் ஏராளமான தவறான முடிவுகளை எடுப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் ஃபிளமிங் விலகி இருக்கிறார்.

புதிய பயிற்சியாளராக மைக் ஹசி நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மைக் ஹசி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான குணம் உடையவர்கள். இதனால் அது சிஎஸ்கே அணிக்கு பலனளிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சஞ்சு சாம்சன் வசம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் பேசுகையில், சிஎஸ்கே கேப்டன்சி தொடர்பாக நிச்சயமாக பல்வேறு ஆப்ஷன்களை ஆலோசிக்கும் என்று கருதுகிறேன். அதேபோல் சிஎஸ்கே அணி இப்போதைக்கு கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்பதையும் ஆலோசிக்கும். என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி கேப்டனாக நியமிக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை கேப்டன்சியில் மாற்ற வர வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி மாற்ற முடிவு செய்யப்பட்டால், சஞ்சு சாம்சன் பெயரை பரிசீலிக்க வேண்டும். ராஜஸ்தான் அணிக்காக 66 போட்டிகளில் கேப்டன்சி செய்திருக்கிறார். அதில் 33 போட்டிகளில் வென்றுள்ளார். கேப்டனை மாற்றிவிட்டால், கோப்பையை வெல்ல முடியாது என்று தெரியும். ஆனால் கேப்டன்சி மாற்றம் செய்தால், சஞ்சு சாம்சனை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *