புதிய சட்டத் திருத்தம் சொல்வது என்ன?
இந்த மாற்றம் ‘Payment and Settlement Systems (PSS) Act, 2007’-இன் பிரிவு 10A-ல் செய்யப்பட்ட திருத்தத்துடன் தொடர்புடையது. இதுவரை, குறிப்பிட்ட டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு ‘Merchant Discount Rate’ (MDR) வசூலிப்பதில் சில சட்டரீதியான கட்டுப்பாடுகள் இருந்தன.
தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், எந்தெந்த டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு கட்டணம் விதிக்கலாம் அல்லது விலக்கு அளிக்கலாம் என்பதை அரசே அறிவிப்பு மூலம் தீர்மானிக்கும் அதிகாரம் பெறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரம் என்ன?
இதன் மூலம், தற்போதைய நிலையில் UPI பயன்படுத்தும் பொதுமக்கள் யாரும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் சில குறிப்பிட்ட பரிவர்த்தனை வகைகள் அல்லது வணிகப் பிரிவுகளுக்கு மட்டும் கட்டண முறையைக் கொண்டுவருவதற்கான சட்டரீதியான இடம் மட்டுமே தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.