சிஎஸ்கே  லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை! தோனி களமிறங்குவாரா? – Kumudam

Spread the love

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 5-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், தனது அடுத்த சுற்று வாய்ப்பை பலப்படுத்த இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த மூன்று போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ள சிஎஸ்கே, அதே உத்வேகத்துடன் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்று களம் இறங்குகிறது.

சென்னை அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். குறிப்பாக, கடந்த போட்டியில் 13 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்த உர்வில் பட்டேல் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார். பந்துவீச்சில் அன்ஷூல் கம்போஜ் (19 விக்கெட்டுகள்) முக்கிய துருப்புச்சீட்டாக உள்ளார். இருப்பினும், ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக விலகியிருப்பது அணிக்கு ஒரு சிறிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், விளையாடிய 11 போட்டிகளில் 8-ல் தோல்வியடைந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *