சிக்மா: “என் சொந்த வாழ்க்கையிலேயே காதல் இல்லை… காதல் படம் எப்படி எடுப்பது?”- ஜேசன் சஞ்சய் | Sigma: “There is no romance in my own life… how can I make a romantic film?” – Jason Sanjay

Spread the love

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அக். 2-ம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், “இயக்குநராக இது என்னுடைய முதல் திரைப்படம். அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்திற்கான அடுத்தடுத்த விளம்பர நிகழ்ச்சிகளில் உங்களை மீண்டும் சந்திப்பேன்.

திரைப்படத்தைப் பற்றி அதிக விஷயங்களை இப்போது வெளிப்படுத்த விரும்பவில்லை என்றாலும், இதில் “ஹைஸ்ட்’ (Heist), சாகசம், புதையல் வேட்டை (Treasure Hunt) போன்ற சுவாரசியமான விஷ்யங்கள் நிறைய இருக்கின்றன.

அதே சமயம், ஒரு ஜாலியான திரைப்படமாகவும் இருக்கும். நடிகர் சுந்தீப் கிஷன் நடித்த ‘மைக்கேல்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகே, அவரை என்னுடைய கதையின் நாயகனாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *