‘சிக்மா’ படம் குறித்து அப்பா விஜய் என்ன சொல்வார்? – ஜேசன் சஞ்சய்! | Jason Sanjay Talks Vijay’s Reaction to Sigma Release

Spread the love

படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக, மலையாளத்தில் பியர்லி மானி நேர்காணலில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய், தனது முதல் படம் குறித்து அப்பா விஜய் என்ன மாதிரியான கருத்து தெரிவிப்பார் என்பது குறித்து பேசியுள்ளார்.

ஜேசன் சஞ்சய், “அப்பா பொதுவாகவே அமைதியான மனிதர். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் யோசித்து முடிவெடுக்க அவருக்குச் சிறிது நேரம் தேவைப்படும்.

நான் ஏதேனும் கேள்வி கேட்டால் கூட, பதில் சொல்ல 10 நொடிகள் எடுத்துக்கொள்வார். அவர் அமைதியாக இருந்தால், ‘கால் கட் ஆயிடுச்சா அப்பா?’ என்று கூடக் கேட்பேன்.

‘பொறுமையாக யோசித்து, ஒரு முடிவுக்கு வந்து பிறகு எனக்கு போன் செய்யுங்கள், இமெயில் அனுப்புங்கள் அல்லது பேசுங்கள்’ என்பேன். ஆனால் நிச்சயம் அவருக்கு ‘சிக்மா’ படம் பிடிக்கும், அவர் கண்டிப்பாகப் பெருமைப்படுவார்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *