MLA ஷாப்பிங்கில் விஜய் மும்முரம்! மளிகை கடையில் ஷாப்பிங் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு! ஸ்டாலின் | MK Stalin criticises CM Vijay for Shopping MLA

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

தாராபுரம்: MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா? என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?

by poll 2026 mk stalin dharapuram 2026

தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.

அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?

இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது.

ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.

பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்

இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் ரோடு ஷோ

தாராபுரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் மக்கள் வெள்ளம் ஸ்டாலினை வரவேற்றனர். அப்போது அங்கிருந்த மக்களிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.

ரோடு ஷோவின் போது திடீரென ஒரு மளிகைக் கடைக்குள் சென்ற ஸ்டாலின் அங்கு விலைவாசி குறித்து கேட்டறிந்தார். அவ்வாறு கேட்ட தனது சொந்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இடைத்தேர்தல்

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் தவெக வெற்றி பெற வாய்ப்பில்லை என்கிறார்கள். அது அதிமுகவின் கோட்டை என்பதால் அங்கு அதிமுக வேட்பாளர்தான் வெல்வார் என்கிறார்கள்.

எம்ஜிஆர் சொல்லியும் கேட்காத மக்கள்

மேலும் கடந்த 1977 ஆம் ஆண்டு தாராபுரத்தில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மீது புகார்கள் வந்த நிலையில் எம்ஜிஆர், அந்த ஒரு தொகுதியில் மட்டும் இரட்டை இலைக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என பிரச்சாரம் செய்தார். அவருக்கு பதிலாக சிங்கம் சின்னத்தில் சுயேச்சையாக நின்ற வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார். ஆனால் எம்ஜிஆர் பிரச்சாரமும் அப்போது எடுபடவில்லை. மக்கள் அதிமுகவுக்குதான் வாக்களித்தனர். அந்த அளவுக்கு தாராபுரம் அதிமுகவின் ஸ்ட்ராங் கோட்டை!

சத்தியபாமா கண்ணீர்

இதனால் இந்த முறையும் அதிமுகவே வெல்லும் என களநிலவரங்கள் சொல்கின்றன. இதையறிந்த தவெக வேட்பாளர் சத்தியபாமா, விஜய் பிரச்சாரத்தின் போது கண்ணீர் விட்டு அழுதார். அதன் பிறகாவது களம் மாறியிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *