சினிமாவில் பயன்படுத்தப்பட்ட இளைஞரின் மொபைல் எண்; படக்குழுவுக்கு எதிராக வழக்குக்கு உத்தரவிட்ட கோர்ட்! | youngster mobile number used in officer on duty movie without permission court directs to file case

Spread the love

நடிகர் குஞ்ஞாக்கோ போபன் நடிப்பில் வெளியான ‘ஆப்பீசர் ஆன் டியூட்டி’ மலையாள சினிமாவில் ஒரு காட்சியில் பெண் மருத்துவர் ஒருவர் பயன்படுத்தும் மொபைல் எண் காண்பிக்கப்பட்டது. வழக்கமாக சினிமாவுக்காக டம்மி நம்பர் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த சினிமாவில் காண்பிக்கப்பட்டது கண்ணூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் 2014-ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வரும் உண்மையான மொபைல் எண் ஆகும். அந்த எண் அவரது ஆதார், பான் மற்றும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த சினிமா திரையரங்குகளில் வெளியாகி, பின்னர் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) மற்றும் ஜீ கேரளம் (Zee Keralam) போன்ற தளங்களில் வெளியானது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த எண்ணை வில்லன் கதாபாத்திரத்தின் எண் எனத் தவறாகப் புரிந்துகொண்டு தொடர்பு கொள்ளத் தொடங்கினர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அந்த எண்ணுக்கு பாலியல் ரீதியான, அச்சுறுத்தல் நிறைந்த மிரட்டல் அழைப்புகளும், வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளும் வந்துள்ளன. இதனால் அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சினிமா காட்சி

சினிமா காட்சி

தனிப்பட்ட மொபைல் எண்ணை, தன்னுடைய எந்தவொரு முன் அனுமதியும் இல்லாமல் திரைப்படத்தில் பகிரங்கமாகக் காண்பித்ததற்கு எதிராக பாதிக்கப்பட்ட இளைஞர் எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. படத்தின் முதன்மை தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான மார்ட்டின் பிரகாட் மற்றும் இணை தயாரிப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *