அமைச்சர் ராஜ்மோகன் அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ரூ. 45,00,000 அளவுக்கு இருக்கும் என்றும், அது மிகவும் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் வகையைச் சேர்ந்தது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே. கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் fake news factories கூட்டத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்று தெரிவித்திருக்கிறார்.