'சினிமா பிடிக்காமலேயே துறைக்கு வந்தவர் தனுஷ்; அழுதுகொண்டேதான் நடிப்பார்' – கஸ்தூரி ராஜா ஷேரிங்ஸ்

Spread the love

‘லவ் ஓ லவ்’ படத்தின் ப்ரீ – ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, ” செல்வராகவன் தான் சினிமா பிடித்து வந்தார். தனுஷிற்கு சினிமா பிடிக்காது.

5, 6 படங்கள் நடிக்கும் வரைக்கும் அவருக்கு சினிமா பிடிக்காது. என்னை விட்டுவிடுங்கள் நான் போய்விடுகிறேன் என்று தான் சொல்லுவார். ‘துள்ளுவதோ இளமை’ படத்தின்போதெல்லாம் அழுதுகொண்டே தான் வந்து நடிப்பார்.

கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜா

சினிமாவுக்கு நம் பிள்ளைகள் யாருமே வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அதனால் ப்ரிவியூ ஷோவிற்கு கூட கூட்டிக்கொண்டு செல்லமாட்டேன். செல்வராகவன் படிப்பாளி.

ஒரு நாள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ‘இனிமேல் நான் படிக்க மாட்டேன்’ என்று சொன்னார். நான் சொன்னேன் சினிமா எனக்கு முன்னாடியும் இருந்தது. என்னுடைய காலத்திலும் இருந்தது. எனக்கு பிறகும் இருக்கும். ஆனால் டிகிரி அப்படி இல்லை.

நீ முதலில் டிகிரி வாங்கிட்டு வா என்றேன். செல்வராகன் படித்தார். நல்ல மதிப்பெண் எடுத்தார். அமெரிக்காவிற்கு படிக்க வைக்க அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் ‘நான் நீங்கள் சொன்ன மாதிரி படித்து முடித்துவிட்டேன் , சினிமாவில் சேர்த்துவிடுங்கள்’ என்றார். நான் நிறைய இயக்குநரிடம் கேட்டேன்.

கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜா

அவர்கள் உங்கள் மகனை எப்படி நாங்கள் சேர்த்துகொள்ள முடியும். நாங்கள் உதவி இயக்குநர்களை எல்லாம் திட்டுவோம் என்றனர். பிறகு பாலசந்தர் சாரிடம் சேர்த்துவிட்டேன். அதன் பிறகு ‘காதல் கொண்டேன்’, ‘துள்ளுவதோ இளமை’ படங்களை எடுத்தார்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *