சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “டிரோன்ஸ்’.
இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தை ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கிறார்.
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்-2’ திரைப்படம் வெளியான மறுநாள் ‘டிரோன்ஸ்’ படம் வெளியானது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் உரிய தியேட்டர் கிடைக்கவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய தயாரிப்பாளர் சதீஸ், ” ஒரு பெரியப் படம் வரும்போது சின்னப் படங்கள் வரக்கூடாதா? ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறோம் .