நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் மழை பெய்யும்போது, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளைத் தொட வேண்டாம். அடுத்த மூன்று நாட்களுக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, TNSTC சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035-க்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது:
உதகை கோட்டம்: 0423-2445577
குன்னூர் கோட்டம்: 0423-2206002
கூடலூர் கோட்டம்: 04262-261296
உதகை வட்டம்: 0423-2442433
குன்னூர் வட்டம்: 0423-2206102
கோத்தகிரி வட்டம்: 04266-271718
குந்தா வட்டம்: 0423-2508123
கூடலூர் வட்டம்: 04262-261252
பந்தலூர் வட்டம்: 04262-220734
அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சம் அடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்படிக்கு லட்சுமி பவ்யா தன்னீரு மாவட்ட ஆட்சித்தலைவர், நீலகிரி மாவட்டம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.