சிறந்த முதல்வர் யார்? ஸ்டாலின் பெயரை சொன்ன அபிஜித் தீப்கே!|‘One of India’s Best’: Abhijit Deepke Praises MK Stalin

Spread the love

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே. டெல்லி ஜந்தர் மந்தரின் போராட்ட வெற்றிக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள கட்டமைப்புகளைப் பார்வையிட்டு வருகிறார்.

அவர் செல்லும் இடங்களில் கட்டமைப்பு மோசமாக இருந்தால், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்று தொலைகாட்சி பேட்டி ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். அதில் அவரிடம், “இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார்?’ என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

“தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவர். அவர் பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருந்தார்.

கேரளாவில் பினராயி விஜயன் கல்வி மற்றும் சுகாதார மாதிரியை மிக நன்றாக அமைத்தார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் பள்ளிகள் மற்றும் சுகாதாரத் துறையில் நன்றாக பணியாற்றி இருக்கிறார். நேர்மையாக சொல்ல வேண்டுமானால், இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *