மனிதனும் மொழியும் தத்துவமும்! – வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் ஒரு ஞானப் பயணம் | A Philosophical Journey Into Human Existence

Spread the love

இசையும் ,நடனம் உணர்ச்சிகளுக்கு சான்று .உணர்வுகளுக்கு சான்று மொழி மட்டுமே .அதில் ஆதி மொழி அந்தம் மொழி என்பது அவர்களுடைய கற்பனைக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் .கற்பனை இல்லை என்றால் கலாச்சாரம் இல்லை. கலாச்சாரம் இல்லை என்றால் சமூகம் இல்லை. சமூகம் ஒழுங்காக கட்டமைக்க பட வேண்டும் . இல்லை என்றால் அது அழிக்கப்படும் .

அதற்குக் காரணம் ஆசைகள்.

ஆசைகள் மூலம் குறுநில மன்னர்கள் ஆட்சிகளை நிறுவினர் . அரசுகள் உண்டானது. பிறகு மக்களுடைய ஆசைகள் அதிகமாகும் போது அதன் காரணமாக ஆட்சிகள் மாறின ; பல காட்சிகள் உருவானது.

உதாரணத்திற்கு நம் பைரவரை உதாரணமாகக் கொள்ளலாம். அது இயற்கையாக தன்னுடைய இருப்பை வரையறுத்துக் கொள்கிறது .அந்த இருப்பிடத்திற்குள் அவற்றின் இனத்தையே அது அனுமதிப்பதில்லை.

அதே மாதிரி தான் நம்முடைய மதங்களும் அந்தந்த நிலங்களுக்கு ஏற்ப ,சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப குழுக்களாக உருவாகி அதிலிருந்து தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவன் மூலம் வழி நடத்தப்பட்டு, அந்த வழிகாட்டுதலின் பேரில் ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகள் மதங்களாக மாறின.

அதன் உட்பிரிவுகள் பறந்து, விரிந்து இன்று ஒவ்வொரு மதத்திலும் கிளைகள் உருவாகி, பிரிந்து தனக்கென்று ஒரு தன்மையை உருவாக்கிக் கொண்டு தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டிய அவசியம் இருப்பினும் நம்மால் விடுபட முடியவில்லை.

அதற்காகத்தான் இந்த உலகத்தில் தத்துவங்கள் பிறந்தது .

இந்த அளவிற்கு நாம் புரிந்து கொண்டால் நாம் மனிதனாக வாழ கற்றுக் கொள்ளலாம் .என்னுடைய வாழ்வியல் பற்றிய சில செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டு இந்த சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் தனியாகத்தான் தோன்றுகிறோம் !தனியாகத்தான் மறைக்கிறோம்! தனியாகத்தான் அறிவும் விடுதலையும் வரவேண்டும் .நேரே அனுபவத்தால் நாமே அறிய வேண்டிய உண்மையை பிறரிடம் இருந்து கொடையாகவோ, கிரயமாகவோ, கடனாகவோ பெற்றுவிட முடியாது.

ஒவ்வொருவரும் தத்தம் வழியை தாமே வகுத்து தம் வாழ்க்கையை தாமாக நாடகமாய் ,விளையாட்டாய் நடத்தி அறிவு முதிர்ந்து தக்க பருவத்தில் பக்குவம் அடைந்து விடுதலை பெற வேண்டும் .

ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்ளலாம். ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளலாம் என்றாலும் தாயும் ,சேயும் ஒன்று ஆயினும் வாயும் வயிறும் வேறு தானே!!

உயிரும் அறிவும் வேறாக தோன்றுவது போல!!

அகந்தை அழிந்த பின்பும் மமதை ஆட்கொண்டு விடுகிறது.

ஆகவே தான் குருவே சரணம் .அந்த குரு என்பது இயற்கையே!

நாம் ஒற்று கவனித்தால் தெரியும். அது ஒரு ஓடும் நதி; ஓடிக்கொண்டே இருக்கும்.

அதிலிருந்து தான் நாம் ஞானம் பெற வேண்டும் .அந்த ஞானம் என்பது உள்ளிருந்து வரவேண்டும் .அதற்கு ஒரு நம்பிக்கை வர வேண்டும். அதன் மூலம் வழி காண வேண்டும் .

கனவை கூட ஒதுக்காமல் அந்நிய படுத்தாமல் பாரா முகமாய் இல்லாமல் பயனடைய வேண்டும் .

எல்லாவற்றையும் ஏற்பது ஞானம் .எல்லா தத்துவங்களும் இவற்றில் தான் முடிகின்றன.

-ராமன் செல்வராஜ்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *