தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த சூசை பாக்கியம் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், மைக்கேல் ஜான் சங்கர் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், ரமேஷ்குமார் என்பவரது விசைப்படகில் 9 மீனவர்களும் என மொத்தம் 25 மீனவர்கள் கடந்த 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் தருவைகுளத்திலிருந்து செளவுள் விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்குச் சென்றனர்.
அவர்கள் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் மாலத்தீவிலிருந்து சுமார் 150 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்து மாலத்தீவு கடற்படையினர் 3 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்தனர். மாலத்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தாகக் கூறி 3 படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறை பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களைக் கைது செய்து, 3 படகுகளையும் கடந்த 14-ம் தேதி மாலத்தீவுக்குக் கொண்டு சென்றனர்.