சீர்காழி: ‘இன்னொரு தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை?’ – மதிமுக MLA செந்தில் செல்வன் திட்டம் என்ன? | Sirkazhi: ‘Unwilling to face another election?’ – What is MDMK MLA Senthil Selvan’s plan?

Spread the love

திமுக இல்லை என்றால் தன் வெற்றி சாத்தியமாகியிருக்காது என்பதை செந்தில் செல்வன் உணர்ந்திருந்தார். இப்படியான சூழலில் மதிமுக, தவெக கூட்டணிக்குச் செல்ல முடிவெடுத்து காய் நகர்த்தல்கள் நடந்தன. மதிமுக-வின் இரு எம்.எல்.ஏக்ளையும் ராஜினாமா செய்ய வைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் தவெக கூட்டணியில் அதே தொகுதி மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது திட்டம். இன்னொரு தேர்தலைச் சந்திக்க செந்தில் செல்வன் விரும்பவில்லை. அதற்கான பொருளாதாரம் தன்னிடம் இல்லை என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.

துரை வைகோ

துரை வைகோ

இதனால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்ற தனது முடிவை வைகோவிடம் சொல்லியிருக்கிறார். இதை வைகோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்படியான சூழலில் தான் பொதுக்குழுவை செந்தில் செல்வன் புறக்கணித்தார். அவர் வெளிப்படையாக நேரடியாக யாரிடமும் தான் திமுக-வில் சேரப்போகிறேன் என்று சொல்லவில்லை. ஆனாலும் திமுக ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் நான் திமுக-வுக்குச் செல்வதாகப் போட்டு விட்டனர், என்னுடைய சூழலை வைகோ புரிந்து கொள்வார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியிருக்கிறார்.

சூழல் இப்படியிருக்கையில் வைகோ, செந்தில்செல்வன் திமுகவுக்குச் செல்வதாகச் சொல்லி விட்டார் என்று சொல்லியிருக்கிறார். இப்போதைக்கு தாயகம், அறிவாலயம் எங்கும் செல்லாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது என்ற முடிவை எடுத்துள்ளார் செந்தில் செல்வன்.

மேலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கும் விருப்பமில்லை, செய்யவும் மாட்டேன், எம்.எல்.ஏ-வாக தொடர வேண்டும் என்பதுதான் அவரது திட்டம் என அவரது தரப்பில் சொல்கிறார்கள்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *