அதிகாலையில், பார்த்தபோது ஒரு குழந்தையான சாய் தீப்தியைக் காணவில்லை. இதையடுத்து செல்வியும் அவரது தந்தையும் மாயமான குழந்தையை அக்கம் பக்கம் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து, போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அக்கம் பக்கம் தேடி நிலையில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடினர். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இறந்த நிலையில் குழந்தை சாய் தீப்தியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே சிறுமி எவ்வாறு உயிரிந்தார் என்பது தெரியவரும் என்று தெரிவித்தனர்.