சீர்காழி: ”மகளுக்கு நடந்த வளைகாப்பு ஏற்பாடு”- மனைவி, மகனை கொன்று விட்டு தற்கொலை செய்த தந்தை | Sirkazhi: Father kills wife and son, then dies by suicide; tragedy strikes on the day of his daughter’s baby shower

Spread the love

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. சினேகா பிரியா நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பேசும்போது, “‘ஜலேந்திரன் வெளிநாட்டில் வேலை செய்தவர். ஊருக்கு வந்ததில் இருந்து மலர்செல்விக்கும், ஜலேந்திரனுக்கும் சண்டை நடக்கும்.

மலர்செல்வி மீதான சந்தேகத்தில் ஜலேந்திரன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார் என்கிறார்கள். எப்போதும் வீட்டுக்குள் சண்டை சச்சரவாகவே இருக்கும்.

தற்கொலை செய்து கொண்ட ஜலேந்திரன்

தற்கொலை செய்து கொண்ட ஜலேந்திரன்

மகள் அனுவிற்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆவதாகத் தெரிகிறது. இன்று வளைகாப்பு நடக்க இருந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வந்ததுடன், சொந்த பந்தங்களையும் அழைத்திருந்தனர்.

இந்நிலையில், என்ன நடந்தது என்று தெரியவில்லை. மனைவி, மகனைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். வளைகாப்பு நடக்க இருந்த தன் மகளைக் கூட நினைத்து பாக்காமல் இப்படிச் செய்து விட்டார்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *