சுற்றிலும் பேரழிவு.. நேபாள வெள்ளத்தில் அசையாமல் நின்ற அந்த பச்சை கலர் வீடு.. வியந்துபோன பொதுமக்கள் | Nepal Flood: All Houses were Swept Away, But One House Stands Amid Devastation, Netizens amazed

Spread the love

International

oi-Vigneshkumar

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தின் காட்சிகள் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. வீடுகள் சீட்டு கட்டுகளை போல இடிந்து விழுவது, மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவது, கட்டிடங்கள் சில நிமிடங்களில் நீரில் மறைவது என பேரழிவின் கொடூரத்தை பார்த்து மக்கள் மிரண்டுவிட்டார்கள்.. இந்த பேரழிவில் சுற்றியிருக்கும் அனைத்து வீடுகளும் அடித்து செல்லவே ஒரே ஒரு வீடு மட்டும் நிற்கும் போட்டோ சமூத வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசமான வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல நூறு பேர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெள்ளம் தாக்கியபோது, சுற்றியிருந்த வீடுகள் அப்படியே அடித்து செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோக்கள் பகீர் கிளப்புவதாகவே உள்ளன.

Nepal Flood Nepal Flood

அந்த ஒரு வீடு

இந்தச் சூழலில் தான் பேரழிவுக்கு மத்தியில் ஒரே ஒரு வீடு மட்டும் கொஞ்சம் கூட அசையாமல் நிற்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோவில், பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு வீடு வேகமாக பாய்ந்து செல்லும் சேறும் சகதியுமான வெள்ளநீருக்கு நடுவே நிற்பது தெரிகிறது. மேலும், அந்த வீட்டுக்குள் ஒரு குடும்பம் இருப்பதாகவும் வீடியோவை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதீத வேகம்

இதில் விஷயம் என்னவென்றால் அதீத வேகத்தில் வந்த வெள்ளம் அப்பகுதியில் இருந்த இதர வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் காலி செய்துவிட்டன. பெரும் பாறைகள், சேறு மற்றும் பல்வேறு பொருட்களை அடித்து சென்ற வெள்ளம், அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் தாக்கி அழித்துவிட்டது. ஆனால், இந்த பேரழிவுக்கு மத்தியிலும் அந்த பச்சை வீடு மட்டும் தொடர்ந்து நின்றது. மற்றொரு வீடியோவில் அந்த பச்சை வீட்டை சுற்றிலும் வெள்ளநீர் சீறி பாய்ந்த போதிலும் அந்த ஒரு வீடு மட்டும் இடிந்து விழாமல் நிற்பது தெரிந்தது.

வீட்டுக்குள் குடும்பத்தினர் சிக்கியிருப்பதாக சிலர் கூறினர். இதனால் அவர்களின் நிலை நெட்டிசன்கள் குறித்து கவலை தெரிவித்தனர். வெள்ளநீரின் வேகம் மற்றும் அதன் அழிவை பார்த்து, வீட்டுக்குள் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருப்பார்களா என்ற அச்சம் ஏற்பட்டது. அந்த வீடு அசையாமல் இருந்தாலும் கூட உள்ளே இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பார்களா என பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே அந்த வீட்டில் இருந்த குடும்பத்தினர் உயிர் தப்பியதாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் கூறப்பட்டது.

நெட்டிசன்கள்

இந்த இரண்டு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும், சுற்றியிருக்கும் அனைத்து வீடுகளும் அழிந்த நிலையில், அந்த ஒரு வீடு மட்டும் தனியாக நிற்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், அந்த வீட்டின் கட்டுமான தரம் குறித்தும் மக்கள் ஆச்சரியமடைந்தனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், “இவ்வளவு பெரிய வெள்ளத்தின் மத்தியிலும் இந்த வீடு எப்படி நின்றது?” என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

கட்டுமானம்

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், “இப்படி சுற்றிலும் வெள்ள நீர் அடித்து செல்லும்போது அவர்களின் மனதில் என்ன ஓடியிருக்கும்? அவர்கள் என்னதான் நினைத்தார்கள் என்பதை யாராவது கேட்டு சொல்லுங்கள்” என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், “இவ்வளவு பெரிய வெள்ளத்தையும் தாக்கு பிடித்திருப்பது வலுவான கட்டுமானத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *