அதேநேரம், தண்ணீருக்குள் மூழ்கியிருந்த ஜெகன்மோகினி குகை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அது என்ன ஜகன்மோகினி குகை? என்று இளைய தலைமுறையினர் கேட்கலாம். கொடைக்கானல் குணா குகைக்கு முன்பே மிகவும் பிரபலமான ஒகேனக்கலில் உள்ள ஜெகன்மோகினிக் குகை ஆகும். இது சமணர் குகைபோல இயற்கையாக அமைந்த குகை அல்ல.

பேய் படங்கள், மாயாஜாலப் படங்களுக்குப் புகழ்பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த இயக்குநர் விட்டலச்சார்யா இயக்கி வெளியாகி தென்னிந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்திய ஜெகன் மோகினி திரைப்படத்திற்காக 1978 ஆம் ஆண்டு இங்குள்ள மலைப்பாறையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் குகை.
தண்ணீரில் இதைப் பார்க்கும்போது த்ரில்லான அழகாக இருக்கும். அன்றிலிருந்து இது ஜெகன் மோகினி குகை என்று அழைக்கப்படுகிறது.
ஐவர் பாணி அருவி, மெயின் அருவி, முதலைப்பண்ணை ஆகியவற்றை பரிசலில் சென்று சுற்றிப் பார்க்கும் சுற்றுலாப் பயனிகளை இந்த ஜெகன் மோகினி குகை தற்போது கவர்ந்து வருகிறது.